சிறப்பாக இடம்பெற்ற பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம்
முல்லைத்தீவு பழையசெம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொங்கல்விழா நேற்று(02.08.2026) இடம்பெற்றது.
பல்வேறு சர்ச்சைகளின் பின்னர் இவ் ஆலயத்தில் நெருக்கடிகள் இடையூறுகளுக்கு மத்தியிலும் ஆலய வழிபாடுகள் இடம்பெற்று வருகிறது.
பூசைவழிபாடுகள்
நேற்று காலை விசேட அபிசேகம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து மதிய பூசை வழிபாடுகளின் பின்னர் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

குறித்த நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்விழா பூசைவழிபாடுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பெருந்திரளான அடியவர்களும் பங்கேற்றனர்.
தொடர்ந்து மாலை வேளையிலே நாயாறு முனியப்பர் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு கச்சை நேர்ந்து மடைபரவி வளர்ந்து நேர்ந்து பொங்கல் இடம்பெற்று அதனை தொடர்ந்து பூசைகள் இடம்பெற்று பரிகளம் வழிவிடுதலோடு இன்று (03) அதிகாலை வருடாந்த பொங்கல் நிறைவடைந்தது.
குறித்த பொங்கல் நிகழ்விற்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளையை அங்கு காட்சிப்படுத்திய கொக்கிளாய் பொலிசார் அங்கு கடமையிலும் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் எவ்வித இடையூறும் இன்றி 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொங்கல்விழா சிறப்பாக இடப்பெற்றது.

