பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் உற்சவம் முன்னெடுப்பு!
பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம் இன்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் இடம்பெற்று அபிஷேகம் நடைபெற்றுள்ளது.
இந்த பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் பொலிஸார் ,அரச புலனாய்வாளர்கள் ஆலய சூழலில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அளவுக்கதிகமான பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்பை தவிர எந்தவிதமான இடையூறுகளும் இன்றி பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இந்த பொங்கல் நிகழ்வில் செம்மலை கிராம மக்கள், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam