தொடர் மழை காரணமாக இரணைமடு குளத்தின் வான்கதவுகள் மதியம் திறக்கப்படலாம்
தொடர் மழை காரணமாக இரணைமடு குளத்தின் வான் கதவுகள் மதியம் திறக்கப்படலாம் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை நீர்ப்பாசன குளங்கள் சில மீண்டும் வான் பாய ஆரம்பித்துள்ளன.
அதனால் தாழ் நிலப் பகுதியில் உள்ள மக்களை விழிப்புடன் செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பிரமந்தனாறு குளம் வான் பாய ஆரம்பித்துள்ளதால் பிரமந்தனாறு மயில்வாகனபுரம் பிரதேசத்தில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் கனகாம்பிகைக் குளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு, கனகாம்பிகைக்குளம், பன்னங்கண்டி, பரந்தன் பகுதிகளிலும் உள்ள மக்களையும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இரணைமடு குளத்தின் நீரேந்தும் பகுதியில் நீர் வருகை அதிகரித்துள்ளதால் இன்று பகல் இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படலாமென நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் இரணைமடு குளத்தின் கனகராயன் ஆற்றுப் படுக்கையில் உள்ள முரசு மோட்டை, கண்டாவளை, புளியம்பொக்கனை, ஊரியான், சிவபுரம், நாகேந்திரபுரம் உள்ளிட்ட தாழ் நிலப்பகுதியில் உள்ள மக்களை அவதானத்துடன் செயல்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தி உள்ளது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam