வவுனியாவில் உடைப்பெடுத்த குளம்: 15 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு
வவுனியா - ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கோமரசங்குளம் பகுதியிலுள்ள குளமொன்று உடைப்பெடுத்துள்ளதுடன் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடரும் மழையுடனான காலநிலையினால் பல குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்பட்ட நிலையிலேயே இவ் குளம் இன்று (12.11.2023) காலை உடைப்பெடுத்துள்ளது.
அதன் கீழுள்ள 15 ஏக்கர் வயல்
நிலங்கள் நீரில் முழ்கி பாதிப்படைந்துள்ளமையுடன் குளத்தின் நீர் தொடர்ந்தும்
வெளியேறிய வண்ணமுள்ளது.
புனரமைப்பு பணி
ஊர் மக்கள் பல மணிநேரமாக குளத்தின் உடைபெடுத்த பகுதியினை மண்நிரப்பி கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை பயனளிக்கவில்லை.

கோமரசங்குளம் பகுதியிலுள்ள இவ் குளம் நீண்ட காலமாக எவ்வித புனரமைப்பு பணிகளும் இன்றி காணப்படுவதுடன், குளத்தின் கீழ் 35 ஏக்கர் வயல் நிலங்கள் காணப்படுகின்ற போதிலும் தற்போது 15 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
இவ் அனர்த்தம் தொடர்பில் உரிய தரப்பினர்களுக்கு தகவல் வழங்கியமையுடன் இவ் குளத்திலிருந்து தொடர்ந்தும் நீர் வெளியேறி வருகின்றது.
வெளியேறும் நீரினை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


உச்சகட்ட பதற்ற நிலையில் யுத்தகளம்.....! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான்: ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan