பொன் சிவகுமாரின் 51ஆவது நினைவு தினத்திற்கு அழைப்பு
தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரின் 51 நினைவுதினம் இன்று(05) யாழ். உரும்பிராய் சந்திப் பகுதியில் அமைந்துள்ள பொன் சிவகுமாரின் நினைவு தூபியில் காலை 9மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
இதுகுறித்து ஏற்பாட்டாளர்கள தெரிவிக்கையில், பொன் சிவகுமார் தமிழ் இனம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக தனது இன்னுயிரை நீத்த ஒரு மாவீரன்.
கட்சி பேதங்களைக் கடந்து
அவரது தியாகம் தொடர்ச்சியாக எமது சந்ததிக்கு கடத்திச் செல்லப்பட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வருடமும் நினைவு தினத்தை அனுஷ்டித்து வருகிறோம்.

இன்று இடம்பெறவுள்ள 51 ஆவது நினைவு தினத்துக்கு வழமை போன்று கட்சி பேதங்களைக் கடந்து அனைவரும் பங்கு கொள்வதுடன் பொதுமக்களும் நினைவு தினத்தில் பங்கு கொள்ள வேண்டும் என அழைப்பு விடுகிறோம் என தெரிவிக்கப்பட்டது.
குறித்த ஊடக சந்திப்பில் பொன் சிவகுமாரனின் நண்பனும் சக போராளிமான மதி மற்றும் நினைவேந்தல் குழு உறுப்பினர் ஈ.வி.செந்தூரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |