சர்வதேச அளவில் விருதுகளை குவிக்கும் பொம்மை திரைப்படம்
ஈழத்தமிழர்களின் வலிகள் நிறைந்த வாழ்க்கையை எடுத்துரைக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட “பொம்மை” திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பொம்மை” திரைப்படம் பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஈழத்தமிழர்களின் வாழ்வியல் அனுபவங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
குவியும் சர்வதேச விருதுகள்
இந்த திரைப்படத்தை நவயுகா குகராஜா இயக்கியுள்ளதுடன், எம்.ரஜினிகாந்த் இசையமைத்துள்ளார்.
மேலும் ஒளிப்பதிவாளராக மதுனி ஹரன்யா பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், “பொம்மை” திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றுவருகிறது. இதுகுறித்து இயக்குநர் நவயுகா குகராஜா தெரிவிக்கையில், “ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை உண்மையின் பக்கம் நின்று ‘பொம்மை’ என்ற படைப்பாக உருவாக்கியுள்ளோம்.
இந்த திரைப்படத்தை பார்க்கும் ஒவ்வொருவரின் இதயமும் நிச்சயம் கனத்த உணர்வை ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், பிரான்ஸ், கனடா, ஸ்வீடன் மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த படம் திரையிடப்பட்டு விருதுகளை குவித்துள்ளதாக கூறப்படுகிறது.
யதார்த்தத்தை பிரதிபலிக்கும் இந்த திரைப்படம் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.