ஊர்காவற்துறை பகுதியில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஊர்காவற்துறை பிரதேசசபை ஆளுகைக்குள் பொலித்தீன் மற்றும் லஞ்சீட் பாவனை அவதானிக்கப்படும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஊர்காவற்துறை பிரதேசசபையின் தவிசாளர் அ.அன்னராசா எச்சரித்துள்ளார்.
இந்த விடயமானது கடந்த 01.01.2026 அன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோரது இணைந்த ஊடக சந்திப்பு நேற்றைய தினம் (12.01.2026) பிரதேசசபையில் நடைபெற்றது.
இதன்போது அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பொலித்தீன் பாவனை காரணமாக பல்வேறுபட்ட நோய்கள் ஏற்பட்டு தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். பொலித்தீன் பாவனை மூலம் எமது சுற்றுச்சூழல் மாசடைகிறது.
பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தல்
பொலித்தீன் பைகள் பாவனைக்கு பதிலாக துணியினாலான பைகளை பயன்படுத்துவதன்மூலம் அதனை கட்டுப்படுத்த முடியும். உணவகங்களில் லஞ்சீட்டை தவிர்த்து வாழையிலை, சுடுநீரில் சுத்தம் செய்த பீங்கான்கள் போன்றவற்றை பயன்படுத்தி உணவுகளை பரிமாற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஊர்காவற்துறை பகுதியில் வசித்தவர்கள் தற்போது ஊர்காவற்துறையை விட்டு வெளியேறி யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் புலம்பெயர் தேசங்களில் வசிக்கின்றீர்கள். அதனால் இங்கே உள்ள தங்களது காணிகள், வீடுகள் பராமறிப்பற்ற நிலையில் பற்றை காடாக இருக்கிறது.
இதனால் அங்கே சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதுடன், சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. இவ்வாறான உங்களது காணிகளுக்கு அருகே வசிக்கின்ற மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே அவற்றினை சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுங்கள். அவ்வாறு சுத்தம் செய்வத தவறும் பட்சத்தில் நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராகி வருகின்றோம் என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri