பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனையில் ஊழியர் பற்றாக்குறை! நோயாளிகள் அவதி
பொலன்னறுவையில் (Polonnaruwa) உள்ள சிறுநீரக மருத்துவமனையில் நிலவும் கடுமையான ஊழியர் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.
இலங்கையில் சிறுநீரக நோயாளிகளுக்கான ஒரே தேசிய மருத்துவமனையான பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனையில் தற்போது மருத்துவர்கள் மட்டுமன்றி ஏனைய துறை ஊழியர்களுக்கும் கடும் பற்றாக்குறை நிலவுகின்றது.
ஊழியர் பற்றாக்குறை
மருத்துவமனைக்கு ஆயிரத்து நூறு ஊழியர்களின் தேவை உள்ள போதும் தற்போதைக்கு 700 பேரளவான ஊழியர்களே சேவையில் ஈடுபடுகின்றனர்.
அத்தோடு, 400க்கும் அதிகமான ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது.
பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் இது பற்றி கலந்துரையாடப்பட்ட போதும், அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் புதிய அரசாங்கத்தின் கொள்கை காரணமாக ஊழியர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காணமுடியாதிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
