பொலன்னறுவையில் திறக்கப்பட்டுள்ள வான்கதவுகள்: வெள்ளத்தில் மூழ்கியுள்ள கிராமங்கள்
பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள பராக்கிரம சமுத்திரம், மன்னம்பட்டி குளம் முதலியனவற்றின் வான்கதவுகள் திறக்கபட்டதன் விளைவாக மகாவலி கங்கையின் கிளை ஆறான வெருகல் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுள்ளது.
இதன் விளைவாக வட்டவன், மாவடிச்சேனை, சேனையூர், ஆணைத்தீவு ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்கள்
இக்கிராமங்களில் வாழ்ந்த மக்கள் வட்டவன் ஶ்ரீ தான்தோன்ரீஸ்வரர் வித்தியாலயத்தில் 106 குடும்பத்தைச் சேர்ந்த 295 ஆட்களும், மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் 140 குடும்பத்தைச் சேர்ந்த 429 ஆட்களும் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைத் திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் மற்றும் செயலாளர் கணபதிப் பிள்ளை சிவானந்தன் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
தற்போது இந்த மக்களுக்கு அரசாங்கத்தின் பேரிடர் முகாமைத்துவத் துறையினரால் சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இம்மக்கள் வீடுகளுக்குச் செல்லும் பொழுது இடருதவி வழங்குவதற்கான ஏற்பாடுகளை திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கம் மேற்கொண்டு வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
