இறக்குமதி செய்யப்படும் 25 மோப்ப நாய்கள்:ஒரு நாயின் விலை 10 லட்சம் ரூபாய்
வெடிப் பொருட்கள் செயலிழப்பு உள்ளிட்ட பொலிஸ் கடமைகளுக்காக மோப்ப நாய் குட்டிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உயர் ரகத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண் நாய்கள் என 25 நாய்களை வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஒரு நாய் குட்டியின் விலை சுமார் 10 லட்சம் ரூபாய் என பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பொலிஸ் விநியோக சேவைப் பிரிவு இந்த நாய்களை கொள்வனவு செய்ய உள்ளது.
பொலிஸ் திணைக்களம் கடந்த 2019 ஆம் அண்டுக்கு பின்னர் மோப்ப நாய்கள் மற்றும் குதிரைகளை கொள்வனவு செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண் மற்றும் பெண் நாய்கள் ஊடாக குட்டிகளை பெற்று, அவற்றை பொலிஸ் துறையில் பல பணிகளில் ஈடுபடுத்துவதற்கான பயிற்சிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan