ரணிலின் தலைவிதியை தீர்மானிக்க நாளை வாக்கெடுப்பு - செய்திகளின் தொகுப்பு
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு நாளை (13.12.2023) மாலை நடைபெறவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நவம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. நவம்பர் 14 ஆம் திகதி முதல் நவம்பர் 21 ஆம் திகதிவரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.
2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஶ்ரீ லங்கா லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கட்சியினர் ஆதரவாக வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, டலஸ் அணி, விமல் அணி என்பன எதிராக வாக்களித்தன. நவம்பர் 22 ஆம் திகதி ஆம் திகதி முதல் குழுநிலை விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில் நாளை 13 ஆம் திகதி புதன்கிழமை பாதீடுமீது இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam