வாக்களிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் முயற்சி - மறுக்கும் தேர்தல் ஆணைக்குழு
பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முயற்சிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானவை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆணையாளர் நாயகம் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பொய்யான அறிக்கை
சுதந்திரமான மற்றும் அமைதியான வாக்கெடுப்பை சகித்துக்கொள்ள முடியாத சிலர் இவ்வாறான பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பொய்யான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் ஆணையாளர் முலும் தெரித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்கா! ஹோர்முஸ் நீரிணையை 'சிவப்புக் கோடு' என்று அறிவித்த ஈரான்
மோசமான முத்துவேல் உடல்நிலை, குடும்பத்திடம் உண்மையை உடைத்த பாண்டியன்... பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam