தேர்தல் முடிவுகள் அறிவிப்பது குறித்து எச்சரிக்கை
தேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த தேர்தல்களின் போது சில ஊடக நிறுவனங்கள், பிரதேச தேர்தல் வாக்கு எண்ணும் நிலையங்களிலிருந்து அதிகாரபூர்வமற்ற தகவல்களை பெற்றுக்கொண்டு பெறுபேறுகளை வெளியிட்டுள்ளனர்.

அதிகாரபூர்வமற்ற தேர்தல் முடிவுகள்
இதனால் தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவிய நம்பிக்கை சீர்குலைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே அதிகாரபூர்வமற்ற வகையில் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை வெளியிடும் ஊடக நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri