கனடாவிலும் ”ஒமிக்ரோன்” - அவசர ஜி7 மாநாட்டை இங்கிலாந்து கூட்டுகிறது.
”ஒமிக்ரோன்” கோவிட் மாறுபாடு கண்டறியப்பட்டதை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட முக்கிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் விமானங்களை தடைசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இந்தநிலையில் பிந்திய தகவல்களின்படி கனடாவிலும் இருவர் ஒமிக்ரோன் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவில் இந்த தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தென்னாபிரிக்காவில் இந்த தொற்று கண்டறியப்பட்டாலும் அது அந்த நாட்டிலேயே தோன்றியதா? அல்லது வேறு நாட்டில் இருந்து அங்கு பரவியதா? என்பது குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை
கடந்த வெள்ளிக்கிழமை நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாமில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த குறைந்தது 13 பயணிகள் ஒமிக்ரோன் மாறுபாட்டுடன் கண்டறியப்பட்டனர்.
இங்கிலாந்தில் மூவர் இந்த தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர். இதனை ஜி7 நாடுகளின் அவசர மாநாட்டை இங்கிலாந்து இன்று கூட்டுகிறது.
ஒருவர் தொற்றுடன் கண்டறியப்பட்டதை அடுத்து இஸ்ரேல் தமது எல்லைகளை மூடியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இரண்டு பேர் இந்த தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், புதிய தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, தென்னாப்பிரிக்கா, பொட்ஸ்வானா, ஸிம்பாப்வே, நமீபியா, லெசோதோ, எஸ்வதினி, மொசாம்பிக் மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன







16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
