வெள்ளம் ஏற்பட்டமைக்கு இதுவே காரணம் : அனுர குற்றச்சாட்டு
பிழையான கொள்கைகள் காரணமாகவே நாட்டில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
பிழையான அபிவிருத்தித் திட்டங்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மழை இயற்கையானது என்ற போதிலும் வெள்ள அனர்த்தம் இயற்கையானதல்ல.
நீண்ட காலமாக நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பிழையான அபிவிருத்தித் திட்டங்களினால் இன்று இயற்கை அனர்த்தங்களின் காரணமாக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அதிகளவு மழை பெய்யக்கூடிய அதிகளவு வெள்ளம் ஏற்படக்கூடிய இடங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய தொழில்நுட்பங்கள் காணப்படுகிறது.
சரியான தொழில்நுட்பங்களை உரிய முறையில் பயன்படுத்துவதில் நாடு தோல்வியடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |