விடுமுறைக் கொண்டாட்டங்களில் முனைப்பு காட்டும் அரசியல்வாதிகள்
நாட்டின் அரசியல்வாதிகள் விடுமுறைக் கொண்டாட்டங்களில் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆண்டு இறுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள உள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடுகளில் கல்வி கற்று வரும் தமது பிள்ளைகளை பார்வையிடும் நோக்கிலும் அரசியல்வாதிகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள உள்ளனர்.
இதேவேளை, இந்த பண்டிகைக் கால விடுமுறையை கழிப்பதற்காக சில நாடாளுமன்ற உறுப்பினர் நுவரெலியா ஜெனரல்ஸ் ஹவுஸ் விடுதியை ஒதுக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடுதி எதிர்வரும் 31ம் திகதி வரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.