தொடருந்து திணைக்கள மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை
தொடருந்து திணைக்களத்தை மறுசீரமைக்கும் தீர்மானம் தொடர்பாக அமைச்சருக்கும் முக்கிய அரசியல்வாதியொருவருக்கும் மோதல் வலுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்து அமைச்சரின் நிலைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அரசாங்கத்திற்கு ஆதரவான பலம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அமைச்சரை மீறி செயற்பட முற்படுவதன் காரணமாக இந்த மோதல் உருவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக இருவருக்கும் இடையில் பனிப்போர் உருவாகியுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மோதலுக்கான காரணம்
தொடருந்து திணைக்களத்தை தனியார் மயமாக்குவதற்கு பதில், அதனை ஒரு அதிகார சபையாக மாற்ற வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
எனினும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர், தொடருந்து துறையை பகுதிகளாக குத்தகைக்கு விடவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்களத்தை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளத் தலைப்பட்டிருப்பதே அமைச்சருக்கும் அவருக்கும் மத்தியிலான மோதல் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
