உலக சுகாதார அமைப்பு வழங்கிய கோவிட் தடுப்பூசி முன்னுரிமை பட்டியலில் அரசியல்வாதிகள் இல்லை
கோவிட் தடுப்பூசியை வழங்க உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள முன்னுரிமை பட்டியலில் அரசியல்வாதிகள் இல்லை என மருத்துவ இரசாயன ஆய்வுக் கூட ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தற்போது கிடைத்துள்ள தடுப்பூசியின் இரண்டாவது தொகை வேறு நபர்களுக்கு வழங்குவதன் மூலம் முதலில் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது முறை செலுத்த வேண்டிய தடுப்பூசியை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரண்டாவது தடுப்பூசியாக வேறு தடுப்பூசியை வழங்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி இந்தியா அன்பளிப்பாக வழங்கிய 5 லட்சம் அஸ்ரா செனக்கா கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.
அதில் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 938 தடுப்பூசிகள் பல்வேறு துறையை சேர்ந்த நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 14 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri