சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், சமத்துவம் பேணப்படும் வகையில் செயற்படுவோம் - தவராசா கலையரசன்

Government Amparai Thavarasa kalaiyarasan Tamil nation alliance
By Varunan Jul 29, 2021 11:51 AM GMT
Report

இந்த நாட்டின் ஜனநாயகம், தமிழ் பேசும் சமூகங்களின் உரிமை சார்ந்த விடயங்களிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதலாகக் குரல் கொடுப்பதன் காரணமாக எங்களைப் பழிவாங்குகின்ற அல்லது மக்கள் மத்தியிலிருந்து முற்றாக வெளியேற்றக் கூடிய செயற்பாடுகளை இந்த அரசாங்கம் முழுமூச்சாகச் செய்து வருகின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

ஆலையடிவேம்பு பிரதேச பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் ஆலையடிவேம்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டிடத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


குறிப்பாக எமது தமிழ்ப் பிரதேசங்களில் இருக்கின்ற பல பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் சீரழிந்து தங்களிடம் இருக்கின்ற சொத்துகளை விற்றே அவர்களது கடன்களை முடிக்கும் சூழ்நிலையிலேயே காணப்படுகின்றன.

ஆனால், ஆலையடிவேம்பு பிரதேசத்தின் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் பல வித்தியாசமான முறைமைகளைக் கையாண்டு, பல சிந்தனையாளர்களின் முயற்சியால் சிறப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

முன்பெல்லாம் இவ்வாறான சங்கங்களிலேதான் அரசியல் ஆக்கிரமிப்புகள் செறிந்திருந்தன. அவ்வாறான காலங்களையெல்லாம் கடந்து இந்த சங்கம் இவ்வாறு சிறப்பாக இயங்கி வருகின்றமை பாராட்டத்தக்கது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பிரதேச கூட்டுறவுச் சங்கங்களை எடுத்துப் பார்க்கின்ற போது ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேச சங்கங்கள் மிகவும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான சங்கங்கள் சமூகம் சார்ந்தும் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

யுத்தத்தால் பாதிப்புற்ற எமது சமூகத்தின் மக்களுக்கு ஏதோவொரு வகையில் நாள் வேதனம் வழங்கக் கூடிய விதத்திலான கைத்தொழில் பேட்டைகளை உருவாக்க முயற்சிக்க வேண்டும். சமூகத்திலுள்ளவர்களுக்கும் தீர்வுகளை வழங்கக் கூடிய விதத்தில் பல முன்மொழிவுகளையும் கூட்டுறவுச் சங்கங்கள் தயாரிக்க வேண்டும்.

எமது அரசியல் ரீதியான செயற்பாடுகளைப் பார்க்கின்ற போது எங்களுக்கு வருடாந்தம் வழங்கக் கூடிய பாதீட்டு நிதியைத் தவிர அரசாங்கத்தினால் வேறு எந்த நிதி மூலங்களும் வழங்கக் கூடிய வாய்ப்புகள் இல்லை.

இந்த நாட்டின் ஜனநாயகம், சிறுபான்மை சமூகங்களின் உரிமை சார்ந்த விடயங்களிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதலாகக் குரல் கொடுப்பதன் காரணமாக எங்களைப் பழிவாங்குகின்ற அல்லது மக்கள் மத்தியிலிருந்து முற்றாக வெளியேற்றக் கூடிய செயற்பாடுகளை இந்த அரசாங்கம் முழுமூச்சாகச் செய்து வருகின்றது.

அந்த அடிப்படையில் நாங்கள் பல சவால்களுக்கு முகங்கொடுத்தே எமது மக்களுக்கான அரசியலைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம். எமது சமூகம் சார்ந்து நாங்கள் பல முன்மொழிவுகளை முன்வைத்திருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்தவரையில் அரசோடு இணைந்து பயணித்த காலங்கள் மிக அரிதானவையாகும்.

உரிமை சார்ந்த விடயங்களை நாங்கள் பேசுவதால் அரசியலில் நாங்கள் ஆளுந்தரப்பாக இருக்கவில்லை. அந்த வகையில் எமது உரிமை சார்ந்து நாங்கள் போராடுவதன் காரணத்தால் எமக்கு சவால் மிக்க விடயங்கள் அதிகம் உண்டு. ஆளுந்தரப்புடன் சென்ற பல அரசியல்வாதிகள் இன்று படுகின்ற அவஸ்தையை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

இந்த நாட்டில் சமாதானம், ஏனைய சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், சமத்துவம் பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுகின்றோம். அந்த அடிப்படையோடு எமது மக்களையும் அணிதிரட்ட வேண்டியவர்களாக இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US