அமெரிக்க அரசாங்கத்தை திரும்பி பார்க்க வைத்த எனது செயல்! சுமந்திரன் ஏமாற்றிவிட்டார் - சிவாஜிலிங்கம் பகீர் தகவல்
வல்வெட்டித்துறை நகரசபையினுடைய தலைமை வேட்பாளருக்குச் சுமந்திரன் ஆதரவாக இருக்கின்றார். ஆதரவைத் தெரிவிக்கலாம். அது பிழையில்லை. ஆனால் கூட்டமைப்புக்குள் இருந்து ஒரு கருப்பு ஆடாக எதிராகச் செயற்பட்டு வாக்களித்தவருக்கு ஆதரவு வழங்கி கூட்டமைப்பை உடைக்கின்றீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறு செயற்படுவதன் மூலம் துரோகம் செய்கின்றீர்கள். நீங்கள் சொல்லுகின்ற வியாக்கியானங்களை எல்லாம் நாங்கள் நம்பத்தயாராக இல்லை.
2010இல் ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிட்டேன். அப்போது நான் வைத்த கோரிக்கை, அமெரிக்கத் தூதரகத்தினால் எழுதப்பட்ட கடிதத்தில் சிவாஜிலிங்கம் பிரபாகரனின் உறவினர்.
இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே இருந்துகொண்டு நடுநிலையாகக் கோரிக்கைகளை வைக்கின்றார். சிங்களவருக்கு ஒரு பிரதமர் தமிழருக்கு ஒரு பிரதமர் என்ற அதிகபட்ச உச்சத்தைக் கேட்கின்றார்.
சர்வதேச விசாரணையைப் பகிரங்கமாகக் கோருகின்றவர் இவர் ஒருவர் தான் என்றும் அமெரிக்கத்தூதுவர் குறிப்பிட்டிருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri