வங்குரோத்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கவே பசில் முன்வந்துள்ளார் - நஸீர் அஹமட்
வங்குரோத்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கவே பசில் முன்வந்துள்ளதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
ஏறாவூரில் நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற வீட்டுக்கு வீடு தென்னை மரம் வளர்க்கும் திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரிவுக்கான தென்னங்கன்றுகள் விநியோகத்தை ஆரம்பித்து வைக்கும் போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எல்லாமே வங்குரோத்து நிலைக்குச் சென்றுவிட்டது என்று கூறப்படுகின்ற இந்த கால கட்டத்திலே சகலவற்றையும் மாற்றியமைக்கும் சவாலை எதிர்கொண்டு நிதியமைச்சராக பசில் ராஜபக்ச பாரமெடுத்துள்ளார்.
அவருடைய ஆளுமையை நன்றாகத் தெரிந்தவன் என்ற வகையிலே இந்த நாட்டிலே ஒரு பொருளாதார மறுமலர்ச்சி விரைவில் ஏற்படுவது நிச்சயமாகும்.
அதிலும் குறிப்பாகக் கிராமிய பொருளாதார அபிவிருத்திகளையும் நன்கு திட்டமிட்டு செயற்படுத்த அவர் தொடங்கி விட்டார்.
நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்து அடுத்த ஒரு மணிநேரத்தில் தனது அமைச்சு அலுவலகத்திற்குச் சென்றவர் நள்ளிரவு வரை பணியாற்றினார் என்பதே ஒரு முன்னுதாரணமாகும்.
பொருளாதாரப் பிரச்சினையை எதிர்pநோக்கியிருக்கின்ற இந்தவேளையிலே சின்னஞ்சிறிய நாடான இலங்கை ஏற்கெனவே யுத்தத்திற்கு முகங்கொடுத்து அதிகளவான பாதிப்புக்களைச் சந்தித்து அது மீளக் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்ற வேளையிலே தாங்கிக் கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி இருக்கின்ற வேளையிலும் இந்த அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை அணுகுவதற்குத் தயங்காமல் இருப்பதுதான் இந்த அரசாங்கத்தின் தைரியமாகும்.
ஒரு இலட்சம் கிலோமீற்றர் பாதைகள் இந்த நாட்டிலே அபிவிருத்தி செய்யப்படுகின்றன. ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு. நாட்டில் கிட்டத்தட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கல் கிராமிய வீட்டுத்திட்டம் பயிர்ச்செய்கைத் திட்டங்கள் என முன்கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த அபிவிருத்தித் திட்டங்களின் பிரதிபலன்கள் உடனடியாகக் கிடைக்காவிட்டாலும் இவை நீடித்து நிலைக்கும் பொருளாதார நன்மைகளாக உள்ளன என தெரிவித்துள்ளார்.





கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
