பதவியை துஸ்பிரயோகம் செய்யும் ஜனாதிபதி! குற்றஞ்சாட்டும் உதய கம்மன்பில
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி தனக்கு வேண்டப்பட்டவரை நியமிக்கப் போவதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கணக்காய்வாளர் நாயகம் பதவியை அரசியல் மயப்படுத்த போவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஊழலுக்கு எதிரான அரசு
இதற்கு முன்னர் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஜனாதிபதிகள் கூட கணக்காய்வாளர் நாயகம் பதவியில் கைவைக்கவில்லை.அதன் சுயாதீன தன்மையை பேணி வந்தனர்.
ஆனால் ஊழலுக்கு எதிரான இந்த அரசின் செயற்பாடு தலைகீழாக இருக்கிறது.
குறித்த பதவிக்கு அனைத்து தகுதிகளும் கொண்டுள்ள தர்மபால கம்மம்பிலவை நியமிக்காமல் அவரை பதில் கணக்காய்வாளர் நாயகமாக நியமித்துள்ளார்.
தகுதியானவருக்கு குறித்த பதவி வழங்கப்பட வேண்டும்.அதற்கு தேவையான தகுதிகளை கொண்டுள்ள தர்மபால கம்மம்பிலவை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு கணக்காய்வாளர்கள் சங்கம் கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
பிரதிநிதிகளின் பதவிக்காலம்
ஆனால் ஜனாதிபதி அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு களனியில் தனது நண்பருக்கு வழங்க திட்டமிட்டுள்ளார்.
அதற்காக அவர் பெயரை அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்துள்ளார்.
ஆனால் அரசியலமைப்பு சபை பிரதிநிதிகள் அந்த பெயரை நிராகரித்துள்ளனர்.
ஆனால் அரசியலமைப்பு சபையில் இருக்கும் பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜனவரி 03 திகதி முடிவடைகிறது.
அதன் பின்னர் ஜனாதிபதிக்கு தேவையான மூவரை அரசியலமைப்பு சபைக்கு நியமித்து தனது நண்பரை கணக்காய்வாளர் நாயகமாக நிமிக்க சந்தர்ப்பம் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
