ஆயுத அடக்குமுறைக்கு அடி பணியாத இனத்தை அதிகார ஒடுக்குமுறைகளால் அடிமைப்படுத்த முயற் சி - ஹாபிஸ் நசீர் எம்.பி காட்டம்

Oddamavadi Valaichenai hospital Nazeer ahamed
By Kanamirtha Jun 02, 2021 10:09 AM GMT
Report

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வந்த பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச்சான்றுகள் வழங்கும் நடவடிக்கைகள் திடீரென, கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்கு மாற்றப்பட்டதற்கான பின்னணிச் சக்திகளைத் தோலுரித்துக் காட்ட வேண்டிய கடமைப்பாடுகள் தனக்கு ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமருக்கும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும், மாவட்ட அரசாங்க அதிபருக்கும், பதிவாளர் நாயகத்துக்கும் அவசர தொலைநகல்களையும் அவர் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நிகழும் பிறப்பு, இறப்பு சம்பவங்களுக்கான பதிவுச்சான்றிதழ்கள், கடந்த 48 வருடங்களாக, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தாலே வழங்கப்பட்டு வந்தன. இதற்கென முஸ்லிம் பதிவாளர் ஒருவரும் பணியில் இருந்தார்.

இந்நிலையில், இந்நடவடிக்கைகள் திடீரென கோரளைப்பற்று பிரதேச செயலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு இனத்தை நிர்வாக ரீதியான ஒடுக்குமுறைக்குள் கொண்டு வருவதற்கான, பாரபட்சங்கள் இதற்குப் பின்னாலுள்ளதாகவே நம்பமுடிகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் ஏற்கனவே, காணி மற்றும் வாழிடங்களுக்கான நிர்வாக எல்லைகளில், சிலரின் அதிகாரத் தொல்லைகளுக்கு உட்பட்டுள்ளனர். இன்னும் அவ்வாறான அதிகாரப் பயங்கரவாதமே தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

அதிகாரப்பகிர்வை கோருகின்ற ஓர் இனம் தம்முடன் பிணைந்து வாழும் மற்றொரு இனத்தைத் தொடர்ச்சியாக நசுக்குவதும் வஞ்சிப்பதும் தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. ஆயுதக்கலாசாரத்தினால் ஓரினத்தை மண்டியிடவைப்பதில் தோற்றுப்போன அரசியல்வாதி தற்போது அதிகார பலத்தின் மூலம் அவர்களை ஒடுக்கமுடியுமென நப்பாசை கொண்டுள்ளனர்.

அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அந்த இனவாத அரசியல்வாதியை மகிழ்வூட்டுவதற்காகவும் தமது வசதி வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்வதற்காகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறான திட்டமிட்ட ஒரு இனத்தின் மீதான பழிவாங்கலுக்குத் துணைபோகின்றார்.

இவர் அநியாயத்திற்கு கூஜா தூக்காமல் நடுநிலையுடன் செயற்படுவதே தார்மீகமாகும். அந்தவகையில் தற்போது இவ்வாறான ஒரு திடீர் மாற்றமும் நிகழ்ந்துள்ளது.

அதுவும் இந்த பகுதிக்குரியதான பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவரான தன்னிடம் கூட கலந்தாலோசிக்காமல் அவசர அவசரமாக, அரைவேக்காட்டுத்தனமாகவும் கபடத்தனமாகவும் இவ்வாறான இழி நடவடிக்கையொன்று மேற்கொள்ளப் பட்டதன் பின்னணிதான் என்ன?

குறித்த ஒரு இனத்தின் மீது, பாரபட்சங்களைச் செலுத்தும் இந்தக் கருவறுத்தல்கள் தொடர்வதற்கு நான், ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. மாவட்டத்திலுள்ள அரசியல் பலங்களால், முஸ்லிம்களைப் பலவீனப்படுத்தும் பக்கச்சார்புகள் ஒழிக்கப்பட வேண்டும்.

இனமொன்றின் இருப்பை அதிகாரத் தொல்லைகளால் அகற்ற அல்லது அடிபணிய வைக்கும் இந்த அரசியல் சதிகள் விரைவில் தோற்கடிக்கப்பட வேண்டும். பழிவாங்கல்களை அரசியல் மூலதனமாக்கப் புறப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இந்த நடவடிக்கைகளால், வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது.

சில அரச அதிகாரிகள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதுதான், தமிழ்மொழிச் சமூகங்களின் ஒன்றுபடலை இன்னுமின்னும் துருவப்படுத்துவதாகவும் அமையும்.

அத்துடன் இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கைகளைத் தட்டிக்கேட்கும் தார்மீக ப் பொறுப்பு இன ஒற்றுமைக்காகக் குரல் கொடுப்போருக்கும் உள்ளதென்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US