பிரின்ஸ் காசிநாதரின் நினைவாகவுள்ள பாலத்தினை அகற்றும் செயற்பாட்டினை மட்டக்களப்பு மக்கள் எதிர்க்க வேண்டும் - சாணக்கியன்

people Batticaloa Shanakiyan
By Kumar May 25, 2021 08:30 PM GMT
Report

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதரின் நினைவாகவுள்ள பாலத்தினை அகற்றும் செயற்பாட்டினை மட்டக்களப்பு மக்கள் எதிர்க்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் கோட்டை பூங்கா பகுதியில் இன்று(செவ்வாய்க்கிழமை) இளைஞர்களினால் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை கோட்டை பூங்கா பகுதிக்கு வருகைதந்த இளைஞர்கள் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

அண்மையில் குறித்த பகுதியில் காட்சியளித்த மரங்கள் வெட்டப்பட்டதாக முகநூல்கள் ஊடாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு இளைஞர்களினால் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


கோட்டை பூங்கா பகுதியானது இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காலத்தில் மரங்கள் வளர்க்கப்பட்டு இயற்கை அழகு பொருந்திய பகுதியாக மாற்றப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டுக் குறித்த பகுதியின் இயற்கை அழகு இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மரம் நடப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வருகைதந்து குறித்த பகுதியைப் பார்வையிட்டுள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள இயற்கை தோனா பகுதியையும் மூடுவதற்கான நடவடிக்கையினை மாநகரசபை முன்னெடுத்துள்ளதாகவும் கழிவுக் குப்பைகளைக் கொட்டி அவற்றினை மூடுவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் அவற்றினையும் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் இளைஞர்கள் இங்கு கோரிக்கை முன்வைத்தனர்.

தாமும் குறித்த சம்பவம் தொடர்பில் இளைஞர்களின் கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதிக்கு வருகைதந்து அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளவை தொடர்பில் அவதானித்ததாக இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன்,

“மட்டக்களப்பு மாநகர சபை எல்லையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதரின் பெயர் வைக்கப்பட்டுள்ள பாலம் இருக்கும் இந்த இடத்தில் கடந்த வாரத்திற்குள் நடைபெற்றுள்ள சில தவறான வேலைத்திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக நான் இன்று இங்கு வந்துள்ளேன்.

உண்மையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர்கள் இன்று காலை ஒன்று கூடி, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்த இடத்திலே சில மரங்களை நடுவதாகச் சொல்லியிருந்தார்கள்.

எனவே இந்த இரண்டு விடயங்களையும் பார்வையிடுவதற்காக நான் இந்த இடத்திற்கு வருகை தந்துள்ளேன். உண்மையிலேயே கடந்த வாரம் இந்த இடத்திலே உள்ள மரங்களை வெட்டுவதாகச் சமூகவலைத்தளங்கள் ஊடாகவும், முகநூல் ஊடாகவும் பார்க்கக்கூடியதாக உள்ளது.

அதே நேரத்தில் நேற்றைய தினம் அல்லது நேற்று முன்தினம் இந்த இடத்தில் குப்பைகளைக் கொண்டுவந்து, இந்த அழகாகத் திருத்த வேண்டிய இந்த பூங்காவிற்குள் உள்ள குளத்தினுள் குப்பைகளைப் போட்டு இதை மூடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமல்லாமல் பல ஆண்டுகளாக மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய பிரின்ஸ் காசிநாதரின் நினைவாக உள்ள இந்த பாலத்தினை அகற்றும் செயற்பாட்டினை மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் ஆரம்பித்துள்ளதாக எங்களுக்குச் சந்தேகமுள்ளது.

மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லுாரியில் கல்வி கற்றுள்ள அனைத்து மாணவர்களும், இந்த விடயத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். ஏன் என்றால் குறித்த பாடசாலையில் ஒரு வரலாற்றுச் சாதனை படைத்த ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர், மக்கள் நேசித்த ஒருவரின் நினைவாகவுள்ள இந்த பாலத்தினை அழிக்கின்ற செயற்பாட்டினை நாங்கள் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

இந்த விடயங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட வேண்டிய விடயம் அல்ல. ஆனால் அரசியல் பின்புலத்தில் மக்களில் அக்கறை இன்றி இயங்கும் நபர்களினால் இவ்வாறான அராஜகங்களை வந்து பார்க்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US