கொழும்பில் திருடனிடம் சிக்கிய அரசியல்வாதியின் மகன்! கமராவில் பதிவான காட்சி
பம்பலப்பிட்டி பிரதேசத்தில் அரசியல்வாதி ஒருவரின் மகனை அச்சுறுத்தி அவரிடம் இருந்த தங்க நகையை கொள்ளையடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த அரசியல்வாதியின் மகன் நேற்று (04.07.2023) மாலை மணியளவில் தனது நண்பியுடன் பம்பலப்பிட்டி லேயாட்ஸ் வீதியில் உள்ள கிராம அதிகாரி அலுவலகத்திற்கு அருகில் சொகுசு காரில் சென்றுள்ளார்.
பொலிஸ் முறைப்பாடு
இருவரும் காரை நிறுத்தி பேசிக்கொண்டிருந்த போது, அந்த இடத்துக்கு சைக்கிளில் வந்த நபர் ஒருவர்,அவர்களை கத்தியை காட்டி மிரட்டி காருக்குளிருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு தான் வந்த சைக்களில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அந்த அரசியல்வாதியின் மகன் தனது நண்பியையும் காரையும் அவ்விடத்திலிருந்து அனுப்பிவைத்து விட்டு பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு தொலைபேசியில் இது குறித்து அறிவித்துள்ளார்.
கொள்ளையர் தனது சைக்கிளில் அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ள விதம் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
மக்களின் உதவி
இதேவேளை, கொள்ளையர் வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த ரோக்ஸிவத்தை ரஞ்சி என அடையாளங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையான சந்தேகநபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹசந்த மாரப்பனவின் மேற்பார்வையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |