முன்னாள் அரசியல்வாதியும் அவரது மகனும் செய்த மோசடி அம்பலம்
மாத்தறை மாவட்டத்தின் முன்னாள் அரசியல்வாதி ஒருவரும் அவரது மகனும் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொல்ஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் வளாகத்தில் சட்டவிரோதமான முறையில் உதிரிபாகங்கள் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்றே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1997 என்ற இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த வாகனத்தை பொலிஸார் கண்டுபிடித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
வாகன மோசடி
குறித்த வாகனத்தின் எண் மற்றும் சேஸி எண் ஆகியவற்றை சரிபார்த்ததில், அது லொறியாக பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும் அரசு ஆய்வாளரும் வாகன சோதனை செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த வாகனம் தொடர்பில் மாத்தறை மாவட்ட முன்னாள் அரசியல்வாதியின் மகனிடம் இன்று வாக்குமூலம் பெறப்பட உள்ளது.
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri