அரசியல் கைதிகள் விடுதலையில் குட்டையைக் குழப்பும் கூட்டமைப்பு!
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஆரம்பம் முதலே விக்னேஸ்வரன் அவர்கள் ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகின்றார் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் நடத்திய ஊடகவியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஆரம்பம் முதலே விக்னேஸ்வரன் அவர்கள் ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகின்றார்.அவர் ரணிலை ஆதரித்தபோதும், அதன் பின்னரான ரணிலுடனான சந்திப்புக்களின் போதும் முதல்கட்ட நல்லிணக்கமாக அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென்றே வலியுறுத்தினார்.

இடையில் இந்தப் பிரச்சினையில் தலையிட்ட கூட்டமைப்பினனர் “அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்காவிட்டாலும் அவர்களில் ஒரு தொகுதியினரை முதல்கட்டமாக விடுவிக்குமாறு” கோரியிருந்தனர்.
தற்போது உள்ள அரசியல் கைதிகளைப் பொறுத்தவரை 47 பேர் வரை சிறைச்சாலைகளில் உள்ளனர். அவர்களில் அதிகமாக 27 வருடங்கள் தொடங்கி 13 வருடங்களுக்கு இடைப்பட்டவர்களாக இருந்து வருகின்றனர்.
அரசாங்கத்தின் ஏமாற்று வேலை

தற்போது அரசாங்கம் வழமைபோன்று தனது ஏமாற்று வேலையை ஆரம்பித்துள்ளது. கடந்த வருடம் ஐ.நா கூட்டத்தொடருக்கு முன்பாக சுமார் 25 பேர் வரையான அரசியல் கைதிகள் அவசர அவசரமாக பிணை வழங்கி விடுவிக்கப்பட்டிருந்தனர்.
அதே பிணை வழங்கிய கைதிகளையே இந்த வருடம் ஐ.நா கூட்டத்தொடருக்கு முன்பாக விடுதலை செய்வதற்கான முயற்சியில் அரசாங்கம் முனைப்புக் காட்டி வருகின்றது.
தற்போது அரசாங்கம் விடுவிப்பதற்காக முயற்சித்து வரும் கைதிகள் யாருமே விடுவிக்கப்பட கூடாதவர்கள் என்பதல்ல. அவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்களே அதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் தற்போது விடுவிக்கப்பட உள்ளவர்கள் யாருமே கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர்களே அல்லர். எல்லோருமே இருபது, இருபத்தி இரண்டு பராயத்தை உடையவர்கள்.
புலிகள் மீள் உருவாக்கம்

இறுதி யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் ஆறு, ஏழு வயது சிறுவர்களாக இருந்தவர்கள், யுத்தம் முடிந்த பின்னர் ‘மாவீரர் நாளுக்கு விளக்கேற்றினார்கள், தலைவரின் புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பகிந்தார்கள்’ போன்ற காரணங்களுக்காக புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்தார்கள் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
தற்போது பிணையில் உள்ள இவர்களையே ஐ.நா கூட்டத்தொடருக்கு முன்பாக விடுவித்துவிட்டு ஐ. நா வையும், தமிழ்மக்களையும் அரசாங்கம் ஏமாற்ற விழைகின்றது. இதற்கு கூட்டமைப்பும் ஒத்து ஓதுகின்றது என்பது தான் வேதனை.
கடந்த வாரம் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த சிவில் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட மூவர் பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.”என கூறியுள்ளார்.