அரசியல் பிரபலத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்.. ஜனாதிபதி வெளியிட்ட பரபரப்பு தகவல்
பல்வேறு ரக துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஒருவருக்கு அரசியல்வாதி ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபரின் அரசியல் தொடர்புகள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முன்னதாகவே தெரியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தான ஆயுதங்கள்..
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை அடக்குவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, குறித்த தொழிலதிபர் கைத்துப்பாக்கிகள் மற்றும் ரிவோல்வர்கள் உள்ளிட்ட பல ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், வெலிவேரிய பகுதியில் குறித்த சந்தேகநபர் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் காணொளிகள் வெளியாகி உள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்களால் முன்னெடுக்கப்படும் இத்தகைய ஆபத்தான நடவடிக்கைகளுக்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றைய தினம், திரை அரங்கமொன்றிலிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஓருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
you may like this video
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri