திரை அரங்கமொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு
திரை அரங்கமொன்றிலிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹங்வெல்ல வீதி திரை அரங்கமொன்றில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதன் போது சந்தேக நபர் ஓருவர் கைது செய்யப்பட்டதுடன் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மில்லன பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த திரை அரங்கத்தில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவோல்வர் துப்பாக்கி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் துப்பாக்கி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போரோ துப்பாக்கி, 12 போரோ உயிர் தோட்டாக்கள் 398, 16 போரோ தோட்டாக்கள் 278, பாயிண்ட் 32 துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 49 தோட்டாக்கள், பாயிண்ட் 32 துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 3083 தோட்டாக்கள் மற்றும் 2 உயிர் கைக் குண்டுகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan