இவ்வருட இறுதிக்குள் அரசியல் தீர்வை வழங்க வேண்டும்: அரசாங்கத்திடம் ராஜித வலியுறுத்து
காலத்தை இழுத்தடிக்காமல் மூவின மக்களும் ஏற்கும் அரசியல் தீர்வை இவ்வருடத்துக்குள் அரசாங்கம் வழங்கியே தீர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தேர்தல் என்று கூறி அரசியல் தீர்வுக்கான சர்வகட்சிப் பேச்சைப் புறக்கணிக்கவோ அல்லது அந்தப் பேச்சை ஒத்திவைக்கவோ முடியாது.

அரசியல் தீர்வு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டங்களில் நானும் பங்கேற்றேன்.
அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் அனைத்துக் கட்சியினரும் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளனர். இது வரவேற்கத்தக்கது.
ஆனால், அதிகாரப் பகிர்வு தொடர்பில்தான் ஒவ்வொரு கட்சியினரும் வெவ்வேறு நிலைப்பாடுகளில் உள்ளனர்.

ஜனாதிபதி கூறியது போல் அதிகாரப் பகிர்வு தொடர்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் முரண்பாடுகள் இல்லாத ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 18 மணி நேரம் முன்
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam