அரசியல் தீர்வு கிடைத்துவிட்டால் புலம்பெயர்ந்தோர் ஒத்துழைப்பர்: தர்மலிங்கம் சித்தார்த்தன்
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமாயின் நாட்டில் நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும், தமிழ் தரப்பினர் அரசியல் கட்சி பேதங்களை விடுத்து அரசியல் தீர்வு விடயத்தில் ஒன்றுபட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (08.12.2022) இடம்பெற்ற 2023 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கை அமைச்சு, முதலீட்டு மேம்பாடு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடு பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்ட பின்னணியில் நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய கொள்கை வகுத்தலிலே தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அல்லது வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற மக்களைப் பொறுத்தமட்டில், எந்தவிதமான பங்களிப்பும் அதில் கிடையாது.
தேசிய கொள்கை வகுத்தலை தெற்கே அரச கட்சி அல்லது தெற்கிலே இருக்கக்கூடிய கட்சிகள் தான் வகுக்கின்றார்கள்.
எங்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் வகுக்கின்றபோது வடகிழக்கினுடைய செயற்பாடுகளை சரியான முறையிலே கவனத்தில் எடுத்துக் கொள்வது குறைவாகவே இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
