அரசியல் கைதிகள் விடயத்தில் தற்போதைய அரசின் நிலைப்பாடு
இதற்கு முன்னால் இருந்த ஜனாதிபதிகள் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியது போல, தற்போது பொது மன்னிப்பு வழங்க முடியாது. அதற்குரிய விதிமுறைகளை நாங்கள் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொது மன்னிப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிப்பது என்பது சாதாரணமான விடயம் அல்ல. தற்போது சிறையில் இருக்கின்ற எவரும் சந்தேகத்தின் பெயரில் இருப்பவர்கள் அல்ல. அனைவரும் நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்கப்பட்டவர்கள்.
எனவே அவர்களுக்கு இதற்கு முன் இருந்த ஜனாதிபதிகள் பொது மன்னிப்பு வழங்கியது போல் பொது மன்னிப்பு வழங்க முடியாது. உரிய நடைமுறைகளை நாங்கள் பின்பற்ற வேண்டும்.
அடுத்ததாக குறித்த சிறைகைதிகள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவங்கள் மிகவும் பாரதூரமானவை.
விடுதலை
முன்னாள் ஜனாதிபதிகளுடைய கொலை திட்டமிடல்கள், பிலியந்தலை பேருந்து குண்டு வெடிப்பு, மத்திய வங்கி குண்டு வெடிப்பு, கண்டி தலதா மாளிகை குண்டு வெடிப்பு, போன்ற சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர்.
எனவே அவர்களை விடுதலை செய்வது என்பது இலகுவான விடயமல்ல. அதேபோல் இவர்களை விடுதலை செய்து சமூகத்தில் ஒற்றுமைப்படுத்துவதே ஒழிய இவர்களை வைத்து அரசியல் செய்ய எவருக்கும் இடம் கொடுத்து விடவும் கூடாது.
தற்போது ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சிற்கும் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கும் இவர்கள் பற்றிய அறிக்கை ஒன்றை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan

திருப்பியடிக்கும் கனேடிய மக்கள்... ட்ரம்பால் 2 பில்லியன் டொலர் மற்றும் 14,000 வேலை வாய்ப்பு இழப்பு News Lankasri
