எட்டு ஆண்டுகள் சிறையிலிருந்த அரசியல் கைதி ஒருவர் விடுதலை!
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஒருவர், மொனராகலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் (கட்டுப்பாடு) ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க (Chandana Ekanayake) தெரிவித்துள்ளார்.
கபிலன் என்ற அரசியல் கைதியே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் கடந்த 2011 ஆம் ஆண்டு இவரை கைது செய்தனர்.
இதனையடுத்து மூன்று ஆண்டுகள் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த அவர், 2013 ஆம் ஆண்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதனடிப்படையில், 11 ஆண்டுகளுக்கு பின்னர், கபிலன் என்பவர் சம்பந்தமான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் முன்வைத்த விடயங்களை கவனத்தில் கொண்டு மொனராகலை நீதவான் நீதிமன்றம், அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
