அவசரமாக மக்கள் சந்திக்கும் பிரதான கட்சிகள்! வலுப்பெறும் தேர்தல் ஒன்றுக்கான ஊகம்!

Mahinda Sajith Elections maithiri Politicla
By Amal Feb 21, 2022 07:54 AM GMT
Report

இலங்கையில் மீண்டும் ஒருமுறை தேர்தல் தொடர்பான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக கூட்டணிகளை அமைப்பது மற்றும் தனித்து போட்டியிடுவது தொடர்பாக பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.

மஹிந்த, பசில் மற்றும் கோட்டா ராஜபக்சர்கள், அண்மையில் அநுரதப்புரத்தில் நடத்திய கூட்டம், பிரசாரக்கூட்டமாகவே நடத்தப்பட்டது.

அதுவும் தற்போதைய கூட்டணியாக இல்லாமல், தனித்து போட்டியிடக்கூடிய ஒரு முனைப்பாகவே, இந்த கூட்டத்தை பொதுஜன முன்னணி நடத்தியிருக்கிறது.

இந்தக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் பிரசாரப் பாணியிலேயே உரையாற்றினர்.


மறுபுறத்தில் எதிர்வரும் தேர்தல் ஒன்றில் தனித்து போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு சென்று பிரசார நோக்கத்திலான சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.


சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டு வருகிறது.

அவசரமாக மக்கள் சந்திக்கும் பிரதான கட்சிகள்! வலுப்பெறும் தேர்தல் ஒன்றுக்கான ஊகம்! | Political Parties Prepare To Elections

குறிப்பாக வடக்கிலும் மலையகத்தில் தமிழ் கட்சிகள் வார இறுதி நாட்களில் பிரசாரப்பாணியிலான கூட்டங்களை மற்றும் சந்திப்புக்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.

கிழக்கிலும் தமிழ் முஸ்லிம் கட்சிகள் பிரசாரப்பாணியிலான மக்கள் சந்திப்புக்களை முடுக்கிவிட்டுள்ளன.

அவசரமாக மக்கள் சந்திக்கும் பிரதான கட்சிகள்! வலுப்பெறும் தேர்தல் ஒன்றுக்கான ஊகம்! | Political Parties Prepare To Elections

எனவே இந்த சந்திப்புக்கள் யாவும் விரைவில் தேர்தல் ஒன்று வரப்போகின்ற செய்தியை வெளிப்படுத்தி வருகின்றன.

பெரும்பாலும் உள்ளுாராட்சி தேர்தலே முதலில் நடைபெறலாம் என்று ஊகங்கள் எழுந்துள்ளன.

2018 பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் ஆட்சியில் இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணிக்கு 29% வாக்குகள் கிடைத்தன.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 12% வாக்குகள் கிடைத்தன.

எனினும் எதிர்கட்சியாக இருந்த பொதுஜன பெரமுன 40 வீத வாக்குகளைப் பெற்று அடுத்த கட்ட தேர்தலுக்கு தம்மை தயார்படுத்திக்கொண்டது.

இந்த உள்ளுாராட்சி தேர்தலிலும் இதனை மையப்படுத்தியே உள்ளுராட்சி தலைவர்களுக்கு அதிக நிதிகளை அரசாங்கம் கடந்த வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கியதாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

இருப்பினும் ஏறிப்போயிருக்கும் வாழ்க்கைச் செலவு, சுழலும் பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவு, அந்நியச் செலாவணி தட்டுப்பாடு, அத்தியாவசியப் பற்றாக்குறை எனப் பல்வேறு பிரச்சினைகளில் பொதுமக்கள் உழன்றுக்கொண்டிருப்பதால் வரப்போகும் உள்ளுாராட்சி தேர்தல் ஒன்றில் 2018 ஆம் ஆண்டைப் போல் போட்டித்தன்மை இருக்காது என்றே கருதலாம்.

உள்ளுாராட்சி தேர்தலில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்துவதற்கான காரணம், ஒரு நாடிப்பிடிப்பு என்றே கருதலாம்.

இந்த தேர்தலில் வருகின்ற முடிவை கொண்டு அடுத்தடுத்த தேர்தலுக்கான தயார் நிலைகளை மேற்கொள்ளலாம் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது.

அரசாங்கத்துக்கு செல்வாக்கு குறைந்து வருவதாக கூறப்படுகின்றபோதும் அரசாங்கம் ஏற்கனவே தம்மை ஆட்சிக்கு கொண்டு வந்த சிங்கள பௌத்த வாக்குகளை பெற்றுக்கொள்ள பல்வேறு உத்திகளை கையாளலாம் என்று பலரும் கூறுகின்றனர்.

எனினும் பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு மத்தியில் இதனை கடந்த காலங்களை போன்று இலகுவாக செய்ய முடியாத நிலை உள்ளது.

அதேநேரம் அரசாங்கத்தின் இந்த முனைப்பை எதிர்க்காமல் தம்மை தேர்தல் ஒன்றுக்கு தயார்படுத்த வேண்டிய அவசியம் எதிர்கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் எதிர்கட்சிகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ அரசாங்கத்தை எதிர்த்து போட்டியிடும் வகையில் மக்கள் மத்தியில் இன்னும் செல்லவில்லை என்றே களத்தகவல்கள் கூறுகின்றன.

இதில் இலங்கையில் அனைவரும் நியாயமான கட்சி என்று கூறக்கூடிய ஜேவிபி மாத்திரம், கிராம மட்டங்களில் தமது செல்வாக்கை பெருப்பித்துக்கொள்வதற்கான தயார் நிலைகளை மேற்கொண்டு வருவதை காணமுடிகிறது.

அவசரமாக மக்கள் சந்திக்கும் பிரதான கட்சிகள்! வலுப்பெறும் தேர்தல் ஒன்றுக்கான ஊகம்! | Political Parties Prepare To Elections

எது எப்படியிருப்பினும் எந்த தேர்தல் வந்தாலும், யார் அதில் வெற்றிப்பெற்றாலும் இலங்கை மக்களின் வாழ்வாதார விடயங்களில் இப்போதைக்கு விமோசனங்கள் இல்லை என்றே கூறலாம்.

மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US