சந்திரிக்கா பற்றிய அரசியல் செய்திகள் ஆதாரமற்றவை: மறுக்கும் அலுவலகம்
சந்திரிகா தொடர்பில் இந்நாட்களில் வெளிவரும் அரசியல் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அவரது அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தரப்புக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அண்மையில் வெளிவந்த செய்திகளை மறுத்துள்ள அவர், தாம் இதுவரையில் எந்தவொரு தரப்புக்கும் ஆதரவு வழங்கவில்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், குறிப்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுஜன முன்னனி கட்சியின் தலைமைப் பதவியை ஏற்கவுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளையும் மறுத்துள்ளார்.
இந்நிலையில்,இந்த ஆண்டு இறுதியில் இலங்கை முக்கியமான தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் உச்சகட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் இந்த அறிவிப்பை சந்திரிக்கா விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு அரசியலமைப்புச் சட்டம் எதுவும் இல்லை என
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஊடகவியலாளர்களிடம்
தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற ஊகங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என அண்மையில் ஜனாதிபதி அலுவலகம் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் கருத்துக்கூற மறுத்துவிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்பதை தம்மால் கூற முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக செய்திகள்: சிவா மயூரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
