மகிந்தானந்தவுக்கு எதிரான மோசடி வழக்கு: தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு
பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான சட்டவிரோத சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 25ம் திகதி வழங்கப்படவுள்ளதாக திகதி குறிக்கப்பட்டுள்ளது.
மகிந்தானந்த அளுத்கமகே, கடந்த 2015ம் ஆண்டுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்டிருந்தார்.
சொகுசு வீடு
அந்தக் காலத்தில் பொரளை பிரதேசத்தில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அவர் கொள்வனவு செய்த சொகுசு வீட்டின் அன்றைய பெறுமதி 274 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் கருதப்படும் 274 இலட்சம் ரூபா பணத்தைப் பயன்படுத்தியே குறித்த சொகுசு வீடு கொள்வனவு செய்யப்பட்டதாக கடந்த நல்லாட்சிக் காலத்தில் மகிந்தானந்தவுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
நீண்ட காலமாக நடைபெற்று வந்த குறித்த வழக்கின் கடைசி விசாரணை சமர்ப்பணம் இன்று கொழும்பு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தீர்ப்பு
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சனில் குலரத்ன மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மகிந்தானந்த அளுத்கமகே சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி காஞ்சன ரத்வத்த ஆகியோர் வழக்கு தொடர்பான வாய்மூல வாதங்களை முன்வைத்துள்ளனர்.
அதனையடுத்து வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணங்களை எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (14) உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி வழங்கப்படும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
