கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு(Photos)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
இச்சந்திப்பு நேற்றைய தினம் (24.05.2023) சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

சமூக, பொருளாதார அபிவிருத்திகள்
இதன்போது மறைந்த தலைவர்களான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோரின் காலத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இருந்த வலுவான உறவு குறித்து சம்பந்தன் நினைவூட்டியுள்ளார்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |


அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 6 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam