பொதுஜன பெரமுனவின்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பு
காரணமாக கட்சிக்குள் குழப்பம் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று திங்கட்கிழமையன்று பொதுஜன பெரமுனவின்
நாடாளுமன்றக்குழுவை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர், நாடாளுமன்ற
உறுப்பினர் நாமல் ராஜபக்சவை தொடர்பு கொண்டு திட்டமிட்ட சந்திப்பு குறித்து
அவருக்குத் தெரிவித்துள்ளார்.
எனினும் பொதுஜன பெரமுனவின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின்
கூட்டத்திற்கு ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்க முடியும்.
தவிர, கட்சியின்
சம்மதத்தைப் பெறாமல் ஏனைய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
கட்சியின் சிரேஷ்டர்களை அவர் அழைக்க முடியாது என்று நாமல் ராஜபக்ச
பதிலளித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
|
|
|
|
|