அநுர அரசாங்கத்தின் தோல்வியை சபையில் அம்பலப்படுத்திய எம்.பி

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lankan political crisis
By Chandramathi Dec 06, 2024 02:45 AM GMT
Chandramathi

Chandramathi

in அரசியல்
Report

அத்தியாவசிய உணவு பொருள் மாபியாக்களை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(05) நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மின் கட்டணம் எவ்வளவு குறைக்கப்படும்! இறுதி தீர்மானம் குறித்த அறிவிப்பு

மின் கட்டணம் எவ்வளவு குறைக்கப்படும்! இறுதி தீர்மானம் குறித்த அறிவிப்பு

மேலும் உரையாற்றுகையில்,''குரங்குகள் தேங்காய்களை உண்பதால் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படுகிறது. அவ்வாறாயின் கடந்த ஆண்டு நாட்டில் குரங்குகள் வாழவில்லையா? தேங்காய்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதுவே உண்மை.

மாபியாக்கள்

அத்தியாவசிய உணவு பொருட்களின் மாபியாக்களின் செயற்பாடு வானளவில் உயர்வடைந்துள்ளது. மாபியாக்களை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

அநுர அரசாங்கத்தின் தோல்வியை சபையில் அம்பலப்படுத்திய எம்.பி | Political Crisis Of Sri Lanka

ஆட்சிக்கு வருவதற்காக தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்ட வாக்குறுதிகளை நினைவுப்படுத்த வேண்டும். வற் வரியில் இருந்து சுகாதாரம் மற்றும் கல்வி துறைகளை நீக்குவதாகவும், வரி சலுகையை 15 சதவீதமாக குறைப்பதாகவும், உணவு பொருட்களின் விலையை குறைப்பதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டது.

நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளார்கள். ஆகவே, வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

நாட்டில் கடந்த வாரம் நிலவிய மழையுடனான காலநிலையால் பெருமளவிலான விவசாய நிலங்கள் முழுமையாகவும், பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

நட்டஈடு

பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 40 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்குவதாக அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. விவசாயிகள் 70 ஆயிரத்துக்கும் அதிகளவில் செலவழித்துள்ள நிலையில், 40 ஆயிரம் ரூபா வழங்குவது எந்தளவுக்கு நியாயமானது.

அநுர அரசாங்கத்தின் தோல்வியை சபையில் அம்பலப்படுத்திய எம்.பி | Political Crisis Of Sri Lanka

விவசாயிகளுக்கு வழங்கப்படும் நட்டஈடு தொடர்பில் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் வினவிய போது ' டி. வி சானக கேட்டுக் கொள்ளுங்கள், 2012, 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் இவ்வாறு தான் நட்டஈடு வழங்கப்பட்டது' என்று குறிப்பிடுகிறார்.

ஆனால் கடந்த காலங்களில் இவ்வாறு குறிப்பிடவில்லை. ஒரு பேனை கையொப்பத்தின் ஊடாக அனைத்தையும் மாற்றுவதாக குறிப்பிட்டீர்கள். ஆனால் இன்று ஏற்கெனவே நடைமுறைப்படுத்திய தீர்மானங்களை செயற்படுத்துவதாக குறிப்பிடுகின்றீர்கள்.'' என சுட்டிக்காட்டியுள்ளார்.   

காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு

காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US