காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு
நாட்டில் நிலவும் காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இன்று (06.12..2024) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 6 மணி நேரம் முன்
6 நாள் முடிவில் வெற்றிநடைபோடும் ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது செய்த மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam