எதிர்கட்சி தலைவர் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள பகிரங்க சவால்(Photos)

Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lankan political crisis
By Rakesh Oct 11, 2022 06:14 AM GMT
Report

"தேர்தல் ஒன்று இல்லாமல் முன்னேற்றம் ஒன்று இல்லை. எனவே, அரசு தேர்தலை நடத்தாவிட்டால் வீதியில் இறங்கி அதற்காகப் போராடுவோம்." என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உடுதும்பர தேர்தல் தொகுதிக் கூட்டம் நேற்று (10) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எதிர்கட்சி தலைவர் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள பகிரங்க சவால்(Photos) | Political Crisis In Sri Lanka Between Sajith Ranil

அவர் மேலும் தெரிவிக்கையில்,"இந்த முட்டாள்தனமான அரசு நாட்டை அழித்து வருகின்றது. இந்த அரசு தேர்தலுக்கு முற்றாக அஞ்சுகின்றது. தேர்தலை பிற்போடவே முயற்சிக்கின்றது.

தேர்தல் ஒன்று இல்லாமல் முன்னேற்றம் ஒன்று இல்லை. எனவே, அரசு தேர்தலை நடத்தாவிட்டால் வீதியில் இறங்கி அதற்காகப் போராடுவோம்.

அன்று வரிசையில் நின்று மக்கள் செத்து மடியும் போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு,உரமின்றி விவசாயிகள் பெருமூச்சு விடும் போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு,எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து உயிர் இழந்தது போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு, இன்று புலம்பிய வண்ணம் கதறி அழுகிறது.

அரசாங்கத்தின் அச்சம்

எதிர்கட்சி தலைவர் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள பகிரங்க சவால்(Photos) | Political Crisis In Sri Lanka Between Sajith Ranil

அமைதியான போராட்டங்களைக் கண்டும் அரசாங்கம் அச்சமடைகின்றது. காலிமுகத்திடல் வளாகத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டதும் இதன் பிரகாரமே. தாயும் மகனும் கைகோர்த்து நடத்தும் அமைதியான ஆர்ப்பாட்டத்தைக்கூட அரசால் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மகனிடமிருந்து தாயை பறித்துச் சென்று ஜீப்பில் ஏற்றிச் செல்லும் காட்சிகளைக் கூட பார்க்க கிடைத்தது.

அமைதியான போராட்டங்களில் ஈடுபடும், ஜனநாயக சுதந்திரத்தை அனுபவிப்பவர்களுக்கு எதிராக செயற்படும் அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி அரசின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டிவரும்.

அரச வன்முறைக்கு நீண்ட கால ஆயுள் இல்லை

எதிர்கட்சி தலைவர் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள பகிரங்க சவால்(Photos) | Political Crisis In Sri Lanka Between Sajith Ranil

அரச பயங்கரவாதத்துக்கும் அரச வன்முறைக்கும் நீண்ட கால ஆயுள் இல்லை. இதற்கு வரலாற்றில் பல படிப்பினைகள் உள்ளன.

உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்துமாறு அரசுக்குச் சவால் விடுகின்றேன். முடிந்தால் ஜனாதிபதி தேர்தலையும் நடத்துங்கள் எனவும் சவால் விடுகின்றேன்.

தேர்தலை ஒத்திவைக்க பல்வேறு சூழ்ச்சிகளை பயன்படுத்துவதை விடுத்து, முடிந்தால் 'மொட்டு' விரும்பும் எந்தத் தேர்தலையும் நடத்துங்கள்"என கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சியின் பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US