தீயுடன் சங்கமமானார் அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்
சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும் அரசியல் ஆய்வாளருமான சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கத்தின் இறுதி கிரியைகள் இன்றையதினம்(12.10.2026) நடைபெற்றுள்ளது.
பிரபல அரசியல் ஆய்வாளரும், மூத்த சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும், ஓய்வுநிலை ஆசிரியருமான சி.அ. யோதிலிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை தனது 70ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார்.
புகழுடலுக்கு அஞ்சலி
வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட கட்டியை அகற்றுவதற்காக, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , கடந்த வியாழக்கிழமை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் எட்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்ற சத்திர சிகிச்சையை தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மறுநாள் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது புகழுடலுக்கு அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டளர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், இறுதி கிரியைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை, குப்பிழான் தெற்கு, வீரமனை பகுதியில் அமைந்துள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் இடம்பெற்றது,
அவரது புகழுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குப்பிழான் காடாகடம்பை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.






அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன் நிலை - பிரித்தானிய நிதி அமைச்சர் எச்சரிக்கை News Lankasri
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam