தமிழர்களை பாதுகாக்க கிழக்கு தீமோர் போன்ற கொள்கைகள் அவசியம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
தமிழர்களைப் பாதுகாப்பதற்குக் கிழக்குத் தீமோரை போன்று சில பொறிமுறைகளை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் கேட்பதாக வவுனியாவில் கடந்த 1757வது நாளாகத் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்களின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களால் இன்று (09) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
மனித உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 அன்று அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 1948 இல், மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட நாள். நம் அன்றாட வாழ்வில், நம் அனைவரையும் பாதுகாக்கும் உரிமைகளை நிலைநிறுத்தவும், அதன் மூலம் அனைத்து மனிதர்களின் உறவை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கலாம்.
மனித உரிமைகளில் வாழ்வதற்கான உரிமை மற்றும் சுதந்திரம், அடிமைத்தனம் மற்றும் சித்திரவதையிலிருந்து சுதந்திரம், கருத்துச்சுதந்திரம், வேலை மற்றும் கல்விக்கான உரிமை மற்றும் இன்னும் பல உள்ளன. பாகுபாடு இல்லாமல், இந்த உரிமைகளுக்கு அனைவருக்கும் உரிமையுண்டு.
சுதந்திரத்திற்குப் பிறகு தமிழர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன. 2009 இல் படுகொலை செய்யப்பட்ட 1,46,000 தமிழர்களைக் காப்பாற்ற ஐ.நா தவறிவிட்டது. 2009 இல் வன்னிக்கு R2P ஐ அமுல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் ஐ.நா தவறி விட்டது.
இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், இனச் சுத்திகரிப்பு மற்றும் மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற பாரிய அட்டூழியக் குற்றங்களைச் சர்வதேச சமூகம் மீண்டும் ஒருபோதும் நிறுத்தத் தவறாது என்பதை உறுதிப்படுத்த முயல்கிறது. எமது தாயகமான வடகிழக்கிற்கு நிரந்தரமான மீளப் பெற முடியாத, பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட அரசியல் தீர்வைக் காணும் வரையில் தமிழர்களைப் பாதுகாப்பதற்குக் கிழக்குத் தீமோரைப் போன்று சில பொறிமுறைகளை அமைக்குமாறு ஐ.நா.விடம் இப்போது கேட்டுள்ளோம்.
சுமந்திரன் குழுவினர் அமெரிக்காவிலிருந்தபோது, இலங்கையில் சிறுபான்மையினர் அதிருப்தியில் இருப்பதுதான் இலங்கைப் பிரச்சனை என்று சொன்னார்கள். இதை அமெரிக்க வெளியுறவுத்துறை ட்வீட் செய்துள்ளது.
ஆனால், நமது இளைய தலைமுறையினர் ஒரு நிலைப்பாட்டை எடுத்து, தமிழர்கள் பண்டைய இறையாண்மை கொண்டவர்கள் என்றும் தீவின் பரிணாம வளர்ச்சியிலிருந்து வாழ்கின்றனர் என்றும் பல ட்விட்டர் செய்திகளை அனுப்பினார்கள். ஆயிரக்கணக்கான ட்வீட்களுக்குப் பிறகு, அமெரிக்க இராசாங்க திணைக்களம் இது சிறுபான்மையினரின் பிரச்சனையல்ல, தமிழர்களின் இறையாண்மைப் பிரச்சனை என்பதை ஒப்புக்கொண்டு அங்கீகரித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை4 ஆண்டுகளுக்கு முன்பு கலிபோர்னியாவில் இறந்த பரமேஸ்வரி கனகசுந்தரம்
அவர்களது 4வது ஆண்டு நினைவுநாள் இன்றாகும். இந்த நாளில் காணாமல்
ஆக்கப்பட்டோரின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இன்று உலர் உணவுப்பொதி மற்றும் மதிய
உணவு வழங்கப்பட்டுள்ளது.






இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 10 மணி நேரம் முன்

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022