சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் செலுத்துவோருக்கு காரைதீவு பொலிஸார் எச்சரிக்கை
சட்ட விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுவார்கள் என அம்பாறை - காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எஸ்.ஜெகத் தெரிவித்துள்ளார்.
மாவடிப்பள்ளி ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து இன்று(17.01.2025) வெள்ளிக்கிழமை பள்ளிவாசலுக்கு வருகை தந்த அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
காரைதீவு பகுதியில் இரவு நேரங்களில் இளைஞர்கள் குழுக்கள் பெரிய சத்தங்களுடன் மோட்டார் சைக்கிள் ஓடுதல், வீதியில் பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தல் போன்ற ஆபத்தை விளைவிக்கும் விதமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்துதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்ட நடவடிக்கைகள்
அத்துடன், போதைப்பொருள் பாவனை, போதைப்பொருள் விற்பனை ஆகியவையும் குறித்த பகுதியில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவற்றுக்கு எதிராக எடுக்கப்படும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் மேற்படி நபர்களுக்கு எதிராக பள்ளி நிர்வாகத்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் பூரண தெளிவினை ஆர் எஸ்.ஜெகத் வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |