யாழ்.தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய திருவிழாவில் 80 பவுண் தங்க நகைகள் திருட்டு்
புதிய இணைப்பு
சந்நிதி தேர்த் திருவிழாவில் 80 பவுண் நகைகள் திருட்டு யாழ்.தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் சுமார் 80 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.
தங்க நகைகளை பறிகொடுத்த 25 பேர் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர் என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய தேர்த் திருவிழா நேற்று நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் பங்கேற்றிருந்த நிலையில், அடியவர்களிடம் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். வயதானவர்களிடமே அதிகளவில் நகைகள் திருடப்பட்டுள்ளன.
தங்க நகைகளைப் பறிகொடுத்த 25 பேர் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில்
சுமார் 80 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று
பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் சுமார் 70 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க நகைகளை பறிகொடுத்த 18 பேர் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய தேர்த் திருவிழா இன்று (9) இடம்பெற்றுள்ளது.
திருடர்களின் கைவரிசை
பல்லாயிரக் கணக்கான அடியவர்கள் பங்கேற்று தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியுள்ளனர். இந்த தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம், திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.
இதற்கமைய தங்க நகைகளை பறிகொடுத்த 18 பேர் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 70 பவுண் தங்கநகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் எச்சரிக்கை
இதனிடையே நாளைய தினம் தீர்த்தத் திருவிழா என்பதனால் அதிகளவான அடியவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அடியவர்கள் தமது நகைகள் மற்றும் பணம் குறித்து அவதானம் தேவை என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.