இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளில் நடக்கும் மோசடி நடவடிக்கை தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கமைய, மெதிரிகிரியவில் பிரதேசத்தில் புதையல் ஒன்றில் இருந்து பெறப்பட்ட மாணிக்கக் கற்கள் எனக் கூறி போலியான கற்களை விற்பனை செய்யும் மோசடி செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பொலநறுவையில் புதையல் ஒன்றில் இருந்து கற்கள் பெறப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த மோசடி தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கற்களை பொது மக்களிடம் காண்பித்து லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஊடகமொன்றின் மூலம் இந்த தகவலை அறிந்துக் கொண்ட பொலிஸ் அதிகாரிகள், மாணிக்க கற்கள் கொள்வனவு செய்யும் நபர்கள் போன்று நடித்து சந்தேக நபர்களை சுற்றிவளைத்துள்ளனர்.
மெதிரிகிரியவில் உள்ள வங்கி ஒன்றிற்கு அருகில் அதனை பெற்றுக் கொள்வதாக கூறிய பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபர்களை அவ்விடத்திற்கு வரழைத்துள்ளனர்.
அதற்கமைய அங்கு வந்த மோசடி கும்பலை கைது செய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அத்துடன் இவ்வாறான பொருட்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து கொள்வனவு செய்தவற்கு முன்னர் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்துக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
