கொழும்பில் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை
கொழும்பில் வேண்டுமென்றே வாகன விபத்துக்களை ஏற்படுத்தி கப்பம் பெறும் நபர்கள் தொடர்பில் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேண்டுமென்றே தனது முச்சக்கரவண்டியை மற்ற வாகனங்களுடன் மோத வைத்து கப்பம் பெறும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரான சாரதி நுகேகொடை மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் வாகனத்தை செலுத்தி வந்துள்ளார் என விசாரரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இரண்டு மாதங்களுக்குள் 15 சாரதிகளிடம் இருந்து 300,000 ரூபாவை விடவும் அதிக பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறான மோசடி கும்பல்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
