இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் போன்று வேடமிட்டு கொள்ளையர்கள் கைவரிசையை காட்டுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குருணாகல் மற்றும் வத்தளை சோவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். பொலிஸ் அதிகாரிகள் போன்று காட்டிக் கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட போலி அடையாள அட்டைகளும் அவர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான 17 கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பல்வேறு நபர்களிடம் தாங்கள் பொலிஸ் அதிகாரிகள் என கூறி அவர்களுக்கு கைவிலங்கு போட்டு ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் தங்க நகைகள் அல்லது பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களே இந்த கும்பலின் இலக்கு என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதனால் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
