எரிபொருள் வரிசையில் குழப்பமான சூழ்நிலை! சாரதிகளுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை
தேசிய எரிபொருள் அனுமதி QR அமைப்பு ஊடாக வரிசையில் வந்து எரிபொருள் பெறுபவர்களுக்கு மாத்திரம் வாய்ப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர இதனை தெரிவித்துள்ளார்.
குழப்பமான சூழ்நிலை
எரிபொருள் பெறும் ஆர்வத்தில் சில சாரதிகள் வரிசையில் நிற்காது வெளியே இருந்து எரிபொருளை பெறும்போது குழப்பமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வரிசையில் வராத எவருக்கும் எரிபொருள் வழங்க வேண்டாம் என்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக டிஐஜி டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
சில மோட்டார் சைக்கிள் சாரதிகள் நடைபாதையில் இருப்பதால் பாதசாரிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
இதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். எனவே அனைத்து சாரதிகளும் பொறுமையாக வரிசையில் இருந்து எரிபொருளை பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலி கணக்குகளை பயன்படுத்தி QR குறியீடு மோசடி! உத்தியோகபூர்வ வலைத்தளம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri