வெள்ளவத்தை கடல் பகுதிக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை
வெள்ளவத்தை தொடருந்து நிலையத்தை அண்மித்த கடல் பகுதிக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் முதலை ஒன்று சுற்றித்திரிவது அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கும் பலகை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
பாடசாலை விடுமுறை என்பதால் ஏராளமானோர் அந்த கடல் பகுதிக்கு வந்து செல்வதுடன் சிலர் தங்கள் பிள்ளைகளுடன் நீராடுவதை அவதானிக்க முடிந்துள்ளது.

எனினும் அந்த இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவு அதிகாரிகள் கடற்கரைக்கு வரும் மக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.
இதனால் அங்கு செல்பவர்கள் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam